சந்திரமவுலி தேசிய சாதனை * ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில்...
கால்கரி: கனடா கோப்பை ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் சந்திரமவுலி, தேசிய சாதனை படைத்தார்.கனடாவில் கால்கரி நகரில் கனடா கோப்பை பைனல், கிராண்ட் ப்ரீ போட்டி நடந்தது. ஆண்களுக்கான 1500 மீ., ஸ்பீடு ஸ்கேட்டிங் நடந்தது. இந்தியா சார்பில் சந்திரமவுலி தண்டா பங்கேற்றார். பந்தய துாரத்தை இவர், 1 நிமிடம், 54.76 வினாடி நேரத்தில் கடந்து, 26 வது இடம் பிடித்தார். இருப்பினும் இது புதிய தேசிய சாதனை ஆனது. தவிர, இப்போட்டியில் 500 மீ., துாரத்தை 36.97 வினாடி, 1000 மீ., துாரத்தை 1 நிமிடம் 12.79 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்தார். இவர், ஏற்கனவே, 3000, 5000 மீ., போட்டியில் சாதித்துள்ளார்.கனடாவின் ரியான் குல்பாக்கி (1:45.48 நிமிடம்), கியன் ஹன்சன் (1.45:90), மேக்ஸ் பவுலின் (1.46:83) முதல் மூன்று இடம் பிடித்தனர்.