உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அபய் சிங் வெற்றி

ஸ்குவாஷ்: அபய் சிங் வெற்றி

கிசா: எகிப்து ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங் வெற்றி பெற்றார்.எகிப்தில், சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், பிரான்சின் கிரிகோயர் மார்ச்சே மோதினர். அபாரமாக ஆடிய அபய் சிங் 3-0 (12-10, 11-9, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பிரிட்டனின் ஜோனா பிரையன்ட் மோதினர். இதில் ஏமாற்றிய வேலவன் 1-3 (8-11, 11-5, 9-11, 1-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை