உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா

ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா

சென்னை: இந்தியன் டூர் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு ஜோஷ்னா முன்னேறினார்.சென்னையில், இந்தியன் டூர்-4 ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 39, எகிப்தின் நார்டின் கராஸ் மோதினர். இதில் ஜோஷ்னா 3-2 (6-11, 11-7, 5-11, 11-6, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில், 17 வயதான இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-2, 11-8) என ஜப்பானின் அகாரி மிடோரிகவாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில், 29 வயதான இந்திய வீராங்கனை தான்வி கண்ணா 3-2 (7-11, 12-10, 14-12, 7-11, 11-4) என ஹாங்காங்கின் சிங் செங்கை வென்றார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 27, ஆஸ்திரேலியாவின் ஜோசப் ஒயிட் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-9, 11-3, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி