உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்

ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்

பாரிஸ்: 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்களுக்கான 'பேட்ச்' ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், செக்குடியரசின் ஜக்குப் சோல்னிக்கி மோதினர். இதில் அசத்திய 'நடப்பு தேசிய சாம்பியன்' வேலவன் 3-0 (11-5, 11-6, 11-2) என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

அகங்ஷா ஏமாற்றம்

அமெரிக்காவில் பெண்களுக்கான செயின்ட் ஜேம்ஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியாவின் அகங்ஷா சாலுங்கே, உக்ரைனின் அலினா புஷ்மாவை எதிர்கொண்டார். இதில் ஏமாற்றிய அகங்ஷா 0-3 (7-11, 7-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ