உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: அனாஹத் அசத்தல்

ஸ்குவாஷ்: அனாஹத் அசத்தல்

சிட்னி: நியூ சவுத் வேல்ஸ் ஸ்குவாஷ் தொடரில் கோப்பை வென்றார் இந்தியாவின் அனாஹத்.ஆஸ்திரேலியாவின் சிட்னியில், நியூ சவுத் வேல்ஸ் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் 16 வயது வீராங்கனை அனாஹத் சிங், சீனாவின் ஹெலன் டங்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 8-11 என இழந்த அனாஹத், அடுத்த செட்டை 11-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த இரு செட்டையும் 11-3, 11-4 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் அனாஹத், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை வசப்படுத்தினார். 7 வது கோப்பைகடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த நார்த் கோஸ்ட் தொடரில் கோப்பை வென்றிருந்தார் அனாஹத். தற்போது மீண்டும் அசத்திய இவர், 2024ல் கைப்பற்றிய 7 வது சர்வதேச கோப்பை இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை