உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்குவாஷ்: ஜோஷ்னா அபாரம்

ஸ்குவாஷ்: ஜோஷ்னா அபாரம்

லான்காஸ்டர்: அமெரிக்க ஸ்குவாஷ் முதல் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.அமெரிக்காவில் பெண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இதில் களமிறங்கினார். முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆட்ரே பெர்லிங்குடன் மோதினார்.முதல் செட்டை ஜோஷ்னா 11-3 என எளிதாக கைப்பற்றினார். அடுத்த செட்டை 11-7 என வசப்படுத்திய இவர், மூன்றாவது செட்டையும் 11-6 என வென்றார். 22 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் ஜோஷ்னா, 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இரண்டாவது சுற்றில் ஜோஷ்னா, இங்கிலாந்தின் கேட்டீ மாலிப்பை சந்திக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை