| ADDED : டிச 06, 2025 08:05 PM
தோகா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சுருச்சி (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றார்.கத்தார் தலைநகர் தோகாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல்ஸ் ('ரைபிள்' / 'பிஸ்டல்' / 'ஷாட்கன்') நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் போகத் (586.22 புள்ளி), மனு பாகர் (578.19), சைன்யம் (573.19) முறையே 2, 6, 8வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய 19 வயதான சுருச்சி (245.1 புள்ளி), ஜூனியர் உலக சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். சைன்யம் 21, (243.3 புள்ளி) வெள்ளி வென்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனு பாகர் 23, (179.2) 5வது இடம் பிடித்து ஏமாற்றினார்.ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் சாம்ராட் ராணா (584.23 புள்ளி), வருண் தோமர் (578.25) முறையே 2, 6வது இடம் பிடித்தனர். அடுத்த நடந்த பைனலில், 221.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த சாம்ராட் வெண்கலம் வென்றார். வருண் (201.2) 4வது இடத்தை கைப்பற்றினார்.10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் பாபுதா, ருத்ராங்க் ஷ் பாட்டீல் ஏமாற்றினர். இந்தியாவுக்கு இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கம் கிடைத்துள்ளது.