உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டேபிள் டென்னிஸ்: மணிகா ஏமாற்றம்

டேபிள் டென்னிஸ்: மணிகா ஏமாற்றம்

ஸ்கோப்ஜே: டபிள்யு.டி.டி., கன்டெண்டர் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா, மானுஷ் ஷா தோல்வியடைந்தனர்.வடக்கு மாசிடோனியாவில், உலக டேபிள் டென்னிஸ் (டபிள்யு.டி.டி.,) கன்டென்டர் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் பேன் ஷுஹான் மோதினர். இதில் ஏமாற்றிய மணிகா 0-3 (10-12, 9-11, 6-11) என தோல்வியடைந்து வெளியேறினார்.ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானுஷ் ஷா, குரோஷியாவின் டோமிஸ்லாவ் புக்கார் மோதினர். இதில் மானுஷ் 1-3 (6-11, 11-4, 6-11, 6-11) என தோல்வியடைந்தார்.மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், சீனதைபேயின் பெங் யி-ஹசின் மோதினர். இதில் மானவ் 3-2 (3-11, 11-6, 4-11, 11-9, 11-9) என 'திரில்' வெற்றி பெற்றார்.ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 3-1 (11-6, 2-11, 11-4, 13-11) என புவர்டோ ரிக்கோவின் ஏஞ்சல் நரஞ்ஜோ, ஆஸ்கர் பிரியேல் ஜோடியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ