உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆயிஹா-சுதிர்த்தா கலக்கல் * ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...

ஆயிஹா-சுதிர்த்தா கலக்கல் * ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்...

அஸ்தானா: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி முன்னேறியது.கஜகஸ்தானில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. பெண்கள் அணி முதன் முறையாக இத்தொடரில் பதக்கம் (வெண்கலம்) வசப்படுத்தியது.தற்போது தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டி நடக்கின்றன. பெண்களுக்கான இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயிஹா, சுதிர்த்தா ஜோடி, கஜகஸ்தானின் மிர்கடிரோவா, ஆகாஷேவா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-0 என (11-4, 11-7, 11-8) நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா, மணிகா பத்ரா ஜோடி, தாய்லாந்தின் ஆரவான், சுதான்சி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 2-3 என்ற செட் கணக்கில் (3-11, 11-9, 8-11, 11-9, 7-11) போராடி தோல்வியடைந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானவ், விகாஷ் ஜோடி, சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை