உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / காலிறுதியில் தியா ஜோடி

காலிறுதியில் தியா ஜோடி

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஷா ஜோடி, நேரடியாக இரண்டாவது சுற்றில் களமிறங்கியது. முதல் செட்டை 8-11 என இந்திய ஜோடி இழந்தது. அடுத்த செட்டை 11-8 என கைப்பற்றியது. தொடர்ந்து 3வது செட்டை 11-6 என வசப்படுத்திய இந்திய ஜோடி, 4வது செட்டையும் 11-7 என வென்றது. முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற ஹாங்காங்கின் வாங் சுன், துா ஹோய் கெம் ஜோடியை சந்திக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி