உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அபாரம்

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா அபாரம்

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சீன தைபேவின் சியன் டங் சுவானை எதிர்கொண்டார். முதல் செட்டை 14-12 என போராடி வென்ற ஸ்ரீஜா, அடுத்த இரு செட்டுகளை 11-8, 11-5 என கைப்பற்றினார். முடிவில் ஸ்ரீஜா 3-0 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சீன தைபேவின் ஹுவாங் இ மோதினர். இதில் மணிகா பத்ரா 1-3 (11-5, 3-11, 6-11, 6-11) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியாவின் யாஷஸ்வினி 0-3 (11-13, 9-11, 3-11) என ஜப்பானின் ஹரிமோட்டோவிடம் வீழ்ந்தார்.ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சத்யன், சக வீரர் மானவ் தாக்கரை சந்தித்தார். இதில் சத்யன் 3-1 (11-7, 9-11, 5-11, 8-11) என வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !