உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக செஸ் சாம்பியன்ஷிப் எங்கே... * போட்டியில் சென்னை, டில்லி, சிங்கப்பூர்

உலக செஸ் சாம்பியன்ஷிப் எங்கே... * போட்டியில் சென்னை, டில்லி, சிங்கப்பூர்

புதுடில்லி: செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடந்த டில்லி, சிங்கப்பூர் விருப்பம் தெரிவித்துள்ளன. சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 20 முதல் டிச. 15 வரை நடக்க உள்ளது. நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடன் 31, (சீனா), கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த இந்தியாவின் இளம் வீரர் குகேஷ் 17, மோத உள்ளார்.மொத்தம் 25 நாள் நடக்கவுள்ள இப்போட்டிக்கான பட்ஜெட் ரூ. 71 கோடி, 'பிடே' அமைப்புக்கு கட்டணம் ரூ. 9 கோடி என மொத்தம் ரூ. 80 கோடி வரை தேவைப்படுகிறது. போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எப்.,) சார்பில் டில்லியில் நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவிர, சிங்கப்பூர் தன் பங்கிற்கு போட்டியில் குதித்துள்ளது.இதுகுறித்து 'பிடே' தலைமை செயல் அதிகாரி எமில் சுடோவ்ஸ்கி கூறியது:உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த சென்னை, சிங்கப்பூர், டில்லி என மூன்று விண்ணப்பங்கள் வந்துள்ளன. அடுத்த வாரம் நடக்கவுள்ள 'பிடே' கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும். விருப்பம் தெரிவித்துள்ள இடங்கள் சார்பில் பிரதிநிதிகளிடம் ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அனுமதி பெறவில்லைஏ.ஐ.சி.எப்., தலைவர் நிதின் படேல் கூறுகையில், ''சென்னையில் உலக சாம்பியன்ஷிப் நடத்துவது குறித்து தமிழக அரசு எங்களிடம் ஆலோசிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியும் பெறவில்லை. ஏ.ஐ.சி.எப்., மத்திய அரசு அனுமதியுடன் டில்லியில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ