உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக செஸ்: குகேஷ் தோல்வி

உலக செஸ்: குகேஷ் தோல்வி

சிங்கப்பூர்: உலக செஸ் தொடரின் 12வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரெனிடம் தோல்வியடைந்தார்.சிங்கப்பூரில், உலக செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற உலகின் 'நம்பர்--5' இந்தியாவின் குகேஷ் 18, 'நடப்பு உலக சாம்பியனும்', உலகின் 'நம்பர்--15' சீனாவின் டிங் லிரென் 32, விளையாடுகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 11 சுற்றுகளின் முடிவில், குகேஷ் 6.0 - 5.0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார்.இதன் 12வது சுற்றில் தமிழகத்தின் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதில் ஏமாற்றிய குகேஷ், 48வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இதுவரை முடிந்த 12 சுற்றுகளின் முடிவில் குகேஷ், லிரென் தலா 6.0 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.கடைசி இரண்டு சுற்று டிச. 11, 12ல் நடக்கிறது. இதில் 1.5 அல்லது 2.0 புள்ளி பெறும் வீரர் 'உலக சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றலாம். ஒருவேளை 14 சுற்றின் முடிவில் போட்டி 7.0 - 7.0 என சமநிலை வகித்தால், 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை