உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / டில்லியில் உலக பாரா தடகளம்: லோகா, சின்னம் அறிமுகம்

டில்லியில் உலக பாரா தடகளம்: லோகா, சின்னம் அறிமுகம்

புதுடில்லி: மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 26-அக். 5ல் டில்லி, நேரு மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான 100 நாள் 'கவுன்ட்-டவுண்' நேற்று துவங்கியது.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் லோகா, சின்னம் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், 'கார்ட்டூன்' வடிவ குட்டி யானை 'விராஜ்' சின்னமாக அறிவிக்கப்பட்டது. 'பிளேடு' ரன்னர்களை போல செயற்கை கால் அமைக்கப்பட்டிருந்தது. இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா கூறுகையில்,''இந்தியாவில் முதல் முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடக்க இருப்பது பெருமையான விஷயம். 100 நாடுகளை சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் பங்ககேற்க உள்ளனர். மொத்தம் 186 பதக்கங்கள் வழங்கப்படும். டில்லி, நேரு மைதானத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. அனைத்து வசதிகளுடன் விரைவில் மைதானம் தயாராகிவிடும். இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவோம். இதன் மூலம் 2036ல் ஒலிம்பிக், பாராலிம்பிக்கை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்துவோம்,''என்றார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பாரா' உலக தடகளத்தின் விளம்பர துாதரான நடிகை, எம்.பி., கங்கனா ரணாவத் கூறுகையில்,''தன்னம்பிக்கை, வலிமையின் அடையாளமாக 'விராஜ்' சின்னம் விளங்குகிறது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை