உலக விளையாட்டு செய்திகள்
பைனலில் ஸ்பெயின்போர்ச்சுகலில் நடக்கும் பெண்கள் (20 வயது) 'யூரோ' கூடைப்பந்து அரையிறுதியில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. ஸ்பெயின் அணி 73-67 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் லிதுவேனியா அணி 80-78 என சுவீடனை வீழ்த்தியது.அர்ஜென்டினா அசத்தல்எகிப்தில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 37-16 என, மெக்சிகோவை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி 34-42 என நார்வேயிடம் தோல்வியடைந்தது.பிரான்ஸ் வெற்றிஜெர்மனியில் நடக்கும் ஆண்களுக்கான 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின. பிரான்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி 3-0 என ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.காலிறுதியில் ஆஸ்திரேலியாசவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 110-82 என, கத்தாரை வீழ்த்தியது. ஏற்கனவே தென் கொரியா, லெபானனை தோற்கடித்த ஆஸ்திரேலியா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது.எக்ஸ்டிராஸ்* மணிப்பூரில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ரியல் காஷ்மீர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் 'நெரோகா' எப்.சி., அணியை வீழ்த்தியது.* ஆந்திராவின் காக்கிநாடாவில் நடக்கும் ஜூனியர் பெண்கள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் ஹரியானா அணி 3-0 என்ற கோல் கணக்கில் சட்டீஸ்கரை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஜார்க்கண்ட் அணி 3-0 என, உ.பி.,யை வென்றது.* ஆஸ்திரேலியாவின் மக்காய் நகரில் நடந்த 3வது 'டி-20' போட்டியில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி (140/8), 4 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியிடம் (144/8) தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா 3-0 என தொடரை கைப்பற்றியது.* பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு (செப். 30 - நவ. 2, இந்தியா, இலங்கை) தயாராக ஜெஸ் கெர், புரூக் ஹாலிடே உள்ளிட்ட 10 நியூசிலாந்து வீராங்கனைகள் சென்னை வந்தனர்.