உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து 'சாம்பியன்'சமோவாவில் நடந்த பெண்களுக்கான (16 வயது) ஓசியானிக் கால்பந்து சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து, சமோவா அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.அரையிறுதியில் செர்பியாஜார்ஜியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (16 வயது) காலிறுதியில் துருக்கி, செர்பியா அணிகள் மோதின. இதில் செர்பிய அணி 94-73 என வென்றது. மற்றொரு காலிறுதியில் லிதுவேனியா அணி 93-90 என ஸ்பெயினை வீழ்த்தியது.நெதர்லாந்து 'ஹாட்ரிக்'ஜெர்மனியில் நடக்கும் பெண்களுக்கான 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 6-0 என பிரான்சை வீழ்த்தியது. ஏற்கனவே அயர்லாந்து, ஜெர்மனியை வீழ்த்திய நெதர்லாந்து 'ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.சீனா அபாரம்சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து காலிறுதியில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் சீன அணி 79-71 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் ஈரான் அணி 78-75 என, சீனதைபே அணியை வீழ்த்தியது.எக்ஸ்டிராஸ்* புச்சி பாபு கிரிக்கெட் தொடருக்கான (ஆக. 18 - செப். 9, சென்னை) மகாராஷ்டிரா அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அங்கித் பவானே நியமிக்கப்பட்டார்.* இந்தோனேஷியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஷுன்சுகே நாகாகவாவை வீழ்த்தினார்.* புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான உ.பி., அணியின் கேப்டனாக சுமித் சங்வான், துணை கேப்டனாக அஷு சிங் நியமிக்கப்பட்டனர்.* ஜலந்தரில் நடக்கும் ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடருக்கான லீக் போட்டியில் சண்டிகர் அணி 4-3 என, அருணாசல பிரதேச அணியை வீழ்த்தியது. உத்தரகாண்ட் அணி 8-1 என அசாமை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை