மேலும் செய்திகள்
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா கோல் மழை
01-Sep-2025
அர்ஜென்டினா கலக்கல்பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அர்ஜென்டினா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 3-1 (25-22, 23-25, 25-21, 25-18) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே பின்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெற்றது.கிரெஜ்சிகோவா வெற்றிசியோல்: தென் கொரியாவில் நடக்கும் கொரிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, ரஷ்யாவின் டாட்டியானா புரோசோரோவா மோதினர். இதில் கிரெஜ்சிகோவா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.எஸ்பான்யோல் அபாரம்மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் எஸ்பான்யல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் மல்லோர்கா அணியை வீழ்த்தியது. எஸ்பான்யல் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என, 10 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடத்தில் ரியல் மாட்ரிட் (12 புள்ளி), பார்சிலோனா (10) உள்ளன.எக்ஸ்டிராஸ்* ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஜே ஸ்டேசி 51, தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மொத்தம் 321 சர்வதேச போட்டியில் விளையாடிய இவர், ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.* ''உலக பாரா தடகளத்தில் (செப். 27 - அக். 5, டில்லி) இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைக்கும்,'' என, இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திரா ஜஜாரியா தெரிவித்தார்.* டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் (அக். 12) இந்தியாவின் குல்வீர் சிங், அபிஷேக் பால், லில்லி தாஸ், சஞ்சீவனி ஜாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.* குரோஷியாவில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் காலிறுதியில் (65 கிலோ) இந்தியாவின் வைஷ்ணவி பாட்டீல் 2-4 என மங்கோலியாவின் என்க்ஜின்னிடம் தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் (76 கிலோ) இந்தியாவின் பிரியா மாலிக் 2-4 என, ஈகுவடாரின் ஜெனிசிஸ் ரியாஸ்கோ வால்டெசிடம் வீழ்ந்தார்.
01-Sep-2025