உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

அல்காரஸ் அதிர்ச்சிபாரிஸ்: பிரான்சில் நடக்கும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-4, 3-6, 4-6 என பிரிட்டன் வீரர் கேமிரான் நோரியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மாஸ்டர்ஸ் தொடரில், தொடர்ச்சியாக 17 போட்டிகளில் வெற்றி கண்ட அல்காரசின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.காலிறுதியில் பிரேசில்சாலே: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி 3-0 என, சீனாவை வீழ்த்தியது. இத்தாலி அணி 4-0 என, நைஜீரியாவை வென்றது.ஜெர்மனி 'ஹாட்ரிக்'காசாபிளாங்கா: மொராக்கோவில் நடக்கும் உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) லீக் போட்டியில் ஜெர்மனி அணி 44-22 என, அர்ஜென்டினாவை வீழ்த்தியது. 'ஹாட்ரிக்' வெற்றி கண்ட ஜெர்மனி (6 புள்ளி) முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.பைனலில் ஸ்பெயின்மலாகா: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய பெண்களுக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து பைனல்ஸ் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயின் அணி 5-0 (4-0, 1-0) என சுவீடனை வென்றது. மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி அணி 3-2 (1-0, 2-2) என பிரான்சை வீழ்த்தியது.எக்ஸ்டிராஸ்* இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெங்களூருவில் இன்று துவங்குகிறது. இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டனாக ரிஷாப் பன்ட், துணை கேப்டனாக சாய் சுதர்சன் களமிறங்குகின்றனர்.* மகாராஷ்டிரா (367/9, 'டிக்ளேர்'), தமிழகம் (72/2) அணிகள் மோதிய சி.கே. நாயுடு டிராபி (23 வயது) லீக் போட்டி புனேயில் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டி 'டிரா' ஆனது.* பெங்களூருவில், பில்லி ஜீன் கிங் கோப்பை 'பிளே-ஆப்' (நவ. 14-16), பெங்களூரு ஓபன் (2026, ஜன. 5-11), ஐ.டி.எப்., தொடர் நடத்தப்படும் என, கர்நாடகா மாநில டென்னிஸ் சங்கம் அறிவித்தது.* உலக டேபிள் டென்னிஸ் (17 வயது) தரவரிசையில் இந்திய வீரர் சுதான்ஷு மைனி, முதன்முறையாக 22வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த 3 'யூத் கன்டென்டர்' தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை