உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

டென்மார்க் கலக்கல்ரோட்டர்டாம்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் டென்மார்க், ஜப்பான் மோதின. டென்மார்க் அணி 36-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ருமேனியா அணி 33-24 என குரோஷியாவை வென்றது.அர்ஜென்டினா 'ஹாட்ரிக்'பாசிக்: பிலிப்பைன்சில், பெண்களுக்கான உலக கோப்பை 'புட்சால்' கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் அர்ஜென்டினா, பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. அர்ஜென்டினா அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே மொராக்கோ, போலந்தை வென்ற அர்ஜென்டினா, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.ஆஸ்டன் வில்லா அசத்தல்லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியில் ஆஸ்டன் வில்லா (இங்கிலாந்து), யங் பாய்ஸ் (சுவிட்சர்லாந்து) அணிகள் மோதின. இதில் ஆஸ்டன் வில்லா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகலில் போர்டோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்சின் நைஸ் அணியை வென்றது.எக்ஸ்டிராஸ் * இந்திய பெண்கள் அணி (20 வயது), ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக, 2 நட்பு போட்டியில் (நவ. 29, டிச. 2, இடம்: எப்.சி. மெட்ராஸ் அகாடமி, மகாபலிபுரம்) உஸ்பெகிஸ்தானுடன் விளையாடுகிறது.* இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளராக அர்ஜென்டினாவின் சாண்டியாகோ நிவா நியமனம். * இந்தியா வரவுள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் (டிச. 21, 23), விசாகப்பட்டினத்திலும், கடைசி 3 போட்டிகள் (டிச. 26, 28, 30) திருவனந்தபுரத்திலும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி