உலக விளையாட்டு செய்திகள்
ஸ்பெயின் 'சாம்பியன்'மாட்ரிட்: பெண்கள் நேஷன்ஸ் லீக் கால்பந்து பைனலில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதின. ஜெர்மனியில் நடந்த முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என கோப்பை வென்றது.ஜெர்மனி ஜெயம்டிரையர்: ஜெர்மனி, நெதர்லாந்தில், பெண்களுக்கான உலக 'ஹேண்ட்பால்' சாம்பியன்ஷிப் 27வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஜெர்மனி அணி 36-26 என்ற கணக்கில் பரோயே தீவுகள் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 29-31 என செர்பியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.அரையிறுதியில் போர்ச்சுகல்பாசிக்: பிலிப்பைன்சில் பெண்களுக்கான உலக கோப்பை 'புட்சால்' கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் போர்ச்சுகல், இத்தாலி அணிகள் மோதின. இதில் போர்ச்சுகல் அணி 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு காலிறுதியில் பிரேசில் அணி 6-1 என ஜப்பானை வென்றது.எக்ஸ்டிராஸ்* ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடரில் பங்கேற்கும் ஆண்கள், பெண்கள் டில்லி அணிகளின் கேப்டனாக ஜர்மன்பிரீத் சிங், நவ்னீத் கவுர் நியமிக்கப்பட்டனர்.* கத்தார் தலைநகர் தோகாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல்ஸ் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் மனு பாகர், சாம்ராட் ராணா, சுருச்சி சிங், இளவேனில், ஈஷா சிங் உள்ளிட்ட 14 பேர் பங்கேற்கின்றனர்.* டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ராஜ்பால், அடுத்த ஆண்டு டிசம்பர் 31 வரை நீடிப்பார் என, அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.* இந்திய வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா 37, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர், 26 ஒருநாள் (31 விக்கெட்), 8 சர்வதேச 'டி-20' (6 விக்கெட்) போட்டிகளில் விளையாடினார்.* கோவாவில் இன்று நடக்கவுள்ள சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான அரையிறுதியில் ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப், கோவா - மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.