உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக மல்யுத்தம்: இந்தியா ஏமாற்றம்

உலக மல்யுத்தம்: இந்தியா ஏமாற்றம்

ஜாக்ரெப்: உலக மல்யுத்த 'கிரிகோ-ரோமன்' பிரிவில் இந்தியாவின் சன்னி குமார், அனில் ஏமாற்றினர்.குரோஷியாவில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 'கிரிகோ-ரோமன்' 63 கிலோ எடைப்பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சன்னி குமார் 1-3 என, கத்தாரின் முகமதியிடம் தோல்வியடைந்தார்.பின், 67 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனில் 0-7 என, பிரான்சின் காகிக் ஸ்ன்ஜோனிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த 87 கிலோ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் கரண் கம்போஜ் 0-8 என அமெரிக்காவின் ஜான் ஜேக்கப்சனிடம் தோல்வியடைந்தார்.'கிரிகோ-ரோமன்' பிரிவில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. 'பிரீஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல் மட்டும் வெண்லகம் வென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை