உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வெள்ளி வென்றார் நம்ரதா * உலக விளையாட்டில் சாதனை

வெள்ளி வென்றார் நம்ரதா * உலக விளையாட்டில் சாதனை

செங்டு: சீனாவில் உலக விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர் (10 வீரர், 7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட்பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.பெண்களுக்கா உஷூ போட்டி, 'சாண்டா' 52 கி.கி., பிரிவில் இந்தியாவின் நம்ரதா பத்ரா, பைனலுக்கு முன்னேறினார். நேற்று நடந்த பைனலில், நம்ரதா, சீனாவின் மெங்யூ செனை சந்தித்தார்.இதில் நம்ரதா 0-2 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதையடுத்து உலக விளையாட்டு உஷூ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என சாதனை படைத்தார். ஆண்களுக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி, அரையிறுதி முதல் 'ஹீட்டில்' இந்தியாவின் ஆர்யன்பால், 34.849 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி