உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பாரா தடகளம்: இந்தியா கலக்கல் * 134 பதக்கம் கைப்பற்றியது

பாரா தடகளம்: இந்தியா கலக்கல் * 134 பதக்கம் கைப்பற்றியது

புதுடில்லி: மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளம், முதன் முறையாக டில்லியில் நடந்தது. 19 நாடுகளில் இருந்து 280 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 145 பேர் களமிறங்கினர். கடைசி நேரத்தில் பாராலிம்பிக் சாம்பியன்கள் சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் விலகினர். நேற்று கடைசி நாள் போட்டி நடந்தது. ஆண்களுக்கான 800 மீ., வீல் சேர் ரேசிங் ('டி 54) பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரமேஷ் சண்முகம், ஒரு நிமிடம், 50.85 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், தங்கம் வென்றார். மணிகண்டன் (2 நிமிடம், 16.15 வினாடி, தமிழகம்) இரண்டாவது, பிலிப்பைன்சின் ஜெரால்டு (2 நிமிடம், 16.65 வினாடி) 3வது இடம் பெற்றனர். வனேசா அபாரம்பாராலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் வனேசா. நேற்று நீளம் தாண்டுதலில் அசத்திய இவர், 4.96 மீ., துாரம் தாண்டி, தங்கம் வென்றார். இந்தியாவின் பவானி முனியாண்டி (3.51 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் வினய் (29.58 வினாடி), அபிஷேக் (31.55) இரண்டு, மூன்றாவது இடம் பெற்று, வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 200 மீ., 'டி-64' பிரிவில் இந்திய வீரர்கள் பிரனவ் (24.75), நரேஷ் (25.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர். 5000 மீ., வீல் சேர் ரேசிங் போட்டியில் இந்தியாவின் அனில் குமார் (13 நிமிடம், 42.33 வினாடி) மட்டும் பங்கேற்று, தங்கம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் 2 வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் பிரீத்தி பால் (31.50 வினாடி), 200 மீ., டி 38 பிரிவு ஓட்டத்தில், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் ரியான்னன் (26.76), ரஷ்யாவின் மார்கரிட்டா (27.00) தங்கம், வெள்ளி வசப்படுத்தினர். ஆண்களுக்கான 5000 மீ., டி 12 பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் ஷரத் (16 நிமிடம், 19.13 வினாடி), சவுரப் (16:58.08), அன்குர் தர்மா (18:58.08) தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான 200 மீ., (டி 47) ஓட்டத்தில் இந்தியாவின் அஞ்சனாபென் (29.64 வினாடி) வெண்கலம் வென்றார். 134 பதக்கம்இந்தியா 45 தங்கம், 40 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 134 பதக்கம் கைப்பற்றி, பட்டியலில் முதலிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை