சாஹில் ராஜேஷ் தங்கம் * உலக பல்கலை., விளையாட்டில்
ரினே ருஹ்ர்: ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. வில்வித்தை 'காம்பவுண்டு' தனிநபர் ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் சாஹில் ராஜேஷ், பிரிட்டனின் அஜய் ஸ்காட் மோதினர். துவக்கத்தில் இருந்து முன்னிலை பெற்றார் சாஹில் (60-59, 90-89, 120-119). முடிவில் 149-148 என 'திரில்' வெற்றி பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கம் ஆனது.'காம்பவுண்டு' தனிநபர் ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், தென் கொரியாவின் யூயின் மூனை எதிர்கொண்டார். இதில் பர்னீத் கவுர், 146-147 என அதிர்ச்சி தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் குஷால் தலால் ('காம்பவுண்டு' தனிநபர்), 148-150 என போலந்தின் கொனேகியிடம் தோற்று, வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டார். இந்தியா இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்துடன், பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறியது.