உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மல்யுத்தம்: காஜல் அபாரம்

மல்யுத்தம்: காஜல் அபாரம்

புதுடில்லி: மல்யுத்தம் தகுதி போட்டியில் காஜல், நீலம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். தென் ஆப்ரிக்காவில், காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப், வரும் டிச. 4–6ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான தேர்வு நேற்று டில்லியில் நடந்தது. 76 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற காஜல், பைனலில் சக வீராங்கனை வேதிதாவை சந்தித்தார். இதில் 35 வினாடியில் வேதிதாவை வீழ்த்தினார். 50 கிலோ பிரிவில் நீலம் சிரோஹி, நேகாவை சாய்த்தார். 23 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பின் வெள்ளி வென்ற அம்ருதா, 72 கிலோ பிரிவு பைனலில் பிபாஷாவை வீழ்த்தினார். தவிர ஆஹில்யா (55), நேஹா சங்வான் (59), புஷ்பா (62), ஜான்வி (65) உள்ளிட்டோரும் தங்கள் பிரிவுகளில் வெற்றி பெற்று, காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ