உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மல்யுத்த வீராங்கனைகள் சஸ்பெண்ட் * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

மல்யுத்த வீராங்கனைகள் சஸ்பெண்ட் * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனைகள் ரீத்திகா, முஸ்கான், வினீதா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்ய, சமீபத்தில் டில்லியில் (மார்ச் 15) தகுதி போட்டி நடந்தன. இதில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், பாரிஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறிய, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (79 கிலோ, 2025) வென்ற, ரீத்திகா ஹூடா சிக்கினார். வரும் 2026, ஜூலை 7 வரை தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சமீபத்தில் மங்கோலியாவில் நடந்த 'ரேங்கிங்' தொடரில் 59 கிலோ பிரிவில் வெண்கலம் வென்ற 17 வயது வீராங்கனை முஸ்கான், 50 கிலோ பிரிவில் களமிறங்கும் வினீதாவும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். இவர்களும் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். தவிர, தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை