மேலும் செய்திகள்
மல்யுத்தம்: இந்தியாவுக்கு 5 தங்கம்
26-Jun-2025
புடாபெஸ்ட்: ஹங்கேரியில் சர்வதேச மல்யுத்த தரவரிசை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. 72 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்ஷிதா, நான்கு முறை ஆசிய சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் ஜமிலியாவை எதிர்கொண்டார். இதில் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஹர்ஷிதா, தங்கப் பதக்கம் வசப்படுத்தினார். 53 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் 20 வயது வீராங்கனை அன்டிம் பங்கல், ரஷ்யாவின் நடாலியா மாலிஷேவா மோதினர். இதில் அன்டிம் 7-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நேஹா, 0-4 என அமெரிக்காவின் ஹெலன் லுாயிசிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 50 கிலோ காலிறுதியில் தோற்ற இந்தியாவின் நீலம், ரெப்பிசாஜ்' போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் சோகோலாவா, செனியா என இரு ரஷ்ய வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய நீலம், வெண்கலம் வசப்படுத்தினார்.
26-Jun-2025