உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நேஹா, ஷிக் ஷா வெண்கலம் * உலக மல்யுத்தத்தில்...

நேஹா, ஷிக் ஷா வெண்கலம் * உலக மல்யுத்தத்தில்...

திரானா: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நேஹா, ஷிக் ஷா வெண்கலப் பதக்கம் வென்றனர்.அல்பேனியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயதுக்குட்பட்ட) போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவில் இந்தியாவின் நேஹா களமிறங்கினார். அரையிறுதியில் 2-3 என நடாமியிடம் (ஜப்பான்) தோற்றார். பின் சீனாவின் ஜங் மிங்குயிவை 5-0 என வென்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.பெண்களுக்கான 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷிக் ஷா, இரினாவிடம் (மால்டோவா) வீழ்ந்தார். அடுத்து நடந்த 'ரெப்பிசாஜ்' போட்டியில், 6-3 என ஜப்பானின் டெராமோட்டோவை சாய்த்து, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார்.இதுவரை இத்தொடரில் இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கம் கைப்பற்றியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை