உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். காலிறுதியில், ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்தினார்.மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலகின் 'நம்பர்-3' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 7வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினர். முதல் செட்டை அல்காரஸ் 6-4 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச், 2வது செட்டை 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச், அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்றார்.மூன்று மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 4-6, 6-4, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். இதில் ஸ்வெரேவ் 7-6, 7-6, 2-6, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஸ்வெரேவ், ஜோகோவிச் மோதுகின்றனர்.அரையிறுதியில் சபலென்கா: பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லியுசென்கோவா மோதினர். இதில் சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயினின் பவுலா படோசா மோதினர். இதில் ஏமாற்றிய கோகோ காப் 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். அரையிறுதியில் சபலென்கா, படோசா மோதுகின்றனர்.

போபண்ணா ஜோடி ஏமாற்றம்

கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி 6-2, 4-6, 9-11 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஒலிவியா, ஜான் பீர்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ