| ADDED : மே 04, 2024 09:53 PM
காக்லியரி: ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் பைனலுக்கு இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் பெய்ஜ்மான் ஜோடி முன்னேறியது.இத்தாலியில் ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரி பெய்ஜ்மான் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், லுாகாஸ் மிட்லர் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய இந்தியா-ஜெர்மனி ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி, பெய்ஜ்மான் ஜோடி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.