உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / போபண்ணா ஜோடி ஏமாற்றம்

போபண்ணா ஜோடி ஏமாற்றம்

மாட்ரிட்: மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி தோல்வியடைந்தது.ஸ்பெயினில் ஏ.டி.பி., மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சன் ஜோடியை எதிர்கொண்டது.'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி, இரண்டாவது செட்டை 5-7 என போராடி கோட்டைவிட்டது. ஒரு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய போபண்ணா, எப்டன் ஜோடி 6-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ