உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டேவிஸ் கோப்பை: சுமித் நாகல் விலகல்

டேவிஸ் கோப்பை: சுமித் நாகல் விலகல்

புதுடில்லி: சுவீடனுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சுமித் நாகல் விலகினார்.சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில், இந்தியா, சுவீடன் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1' போட்டி (செப். 14-15) நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணிக்கு சுமித் நாகல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். நியூயார்க்கில் நடக்கும் யு.எஸ்., ஓபன் ஒற்றையர் முதல் சுற்றில் பங்கேற்ற சுமித் நாகலுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இரட்டையர் பிரிவில் இருந்து விலகினார். அடுத்த இரு வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட சுமித் நாகல், டேவிஸ் கோப்பையில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார். சுமித் நாகலுக்கு பதிலாக ஆர்யன் ஷா தேர்வானார். சுமித் நாகல் கூறுகையில், ''சுவீடனுக்கு எதிரான டேவிஸ் கோப்பையில் பங்கேற்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் முதுகுப்பகுதி காயத்தால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விலக வேண்டியதாயிற்று. இது ஏமாற்றம் அளிக்கிறது. காயத்தில் இருந்து மீண்டு, விரைவில் போட்டிக்கு திரும்புவேன். இந்திய அணிக்கு வாழ்த்துகள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி