உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டென்னிஸ் சஹாஜா சாம்பியன்

டென்னிஸ் சஹாஜா சாம்பியன்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஐ.டி.எப்., தொடரில் கோப்பை வென்றார் இந்தியாவின் சஹாஜா.அமெரிக்காவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, அமெரிக்காவின் அமி ஜூவை சந்தித்தார் இதில் சஹாஜா 6-4, 7-6 என நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். அமெரிக்காவில் நடந்த புரோ டென்னிசில் சானியா, கர்மான் தண்டிக்குப் பின் கோப்பை வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் சஹாஜா.சீனா தைபேவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் பைனலில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, 3-6, 7-5, 6-3 என ஜப்பானின் ஒகமுராவை சாய்த்து சாம்பியன் ஆனார்.சீனாவில் நடந்த ஆண்களுக்கான ஐ.டி.எப்., தொடர் பைனலில் இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த், 6-3, 6-4 என தாய்லாந்தின் விஷயாவை சாய்த்து கோப்பை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ