உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / மாட்ரிட் ஓபன்: ஸ்வியாடெக் சாம்பியன்

மாட்ரிட் ஓபன்: ஸ்வியாடெக் சாம்பியன்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், 2வது இடத்தில் உள்ள பெலாரசின் அரினா சபலென்கா மோதினர். முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய ஸ்வியாடெக், இரண்டாவது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஸ்வியாடெக் 7-6 என தன்வசப்படுத்தினார்.மூன்று மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர, கடந்த ஆண்டு பைனலில் சபலென்காவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார்.நடப்பு சீசனில் 3வது பட்டம் வென்ற ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாக தனது 20வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 2012க்கு பின் இளம் வயதில் 20 பட்டம் வென்ற வீராங்கனையானார் ஸ்வியாடெக் (22 வயது). இதற்கு முன் 2012ல் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி (22 வயது) இச்சாதனை படைத்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !