உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / மைனேனி-ராமநாதன் ஜோடி சாம்பியன்: சென்னை ஓபனில் அசத்தல்

மைனேனி-ராமநாதன் ஜோடி சாம்பியன்: சென்னை ஓபனில் அசத்தல்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னையில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த ரித்விக், நிக்கி பூனாச்சா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 3-6 என இழந்த மைனேனி, ராமநாதன் ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய மைனேனி, ராம்குமார் ஜோடி 10-5 என வென்றது.ஒரு மணி நேரம், 23 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய மைனேனி, ராமநாதன் ஜோடி 3-6, 6-3, 10-5 என வெற்றி பெற்று கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை