‘ரவுண்ட்–அப்’
டென்னிஸ்: அல்காரஸ் ‘சாம்பியன்’ டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், செக் குடியரசின் லெஹெக்கா மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை அல்காரஸ் 7–6 என வசப்படுத்தினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6–4 என வென்றார். ஒரு மணி நேரம், 37 நிமிடம் நடந்த போட்டியில் முடிவில் அல்காரஸ், 7–6, 6–4 என வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார். கால்பந்து: கவுத்தமாலா அபாரம் கவுத்தமாலா: வடக்கு, மத்திய ஆப்ரிக்க அணிக்கு இடையிலான ‘கன்காகப்’ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. இதில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கவுத்தமாலாவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் கவுத்தமாலா அணி, 1–0 என சுரினாம் அணியை வென்றது. லீக் சுற்று முடிவில் கவுத்தமாலா, ஜமைக்கா அணிகள் புள்ளிப்பட்டியலில் ‘டாப்–2’ இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறின. முசோவா, ஆன்ட்ரீவா அசத்தல் பீஜிங்: சீனாவில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உக்ரைனின் ஸ்னிகுர் மோதினர். இதில் ஆன்ட்ரீவா, 6–2, 6–2 என எளிதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, 6–2, 6–2 என, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தார்.