உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டேபிள் டென்னிஸ்: சுதிர்த்தா தோல்வி

டேபிள் டென்னிஸ்: சுதிர்த்தா தோல்வி

ஜெட்டா: சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுதிர்த்தா, யாஷஸ்வினி தோல்வியடைந்தனர்.சவுதி அரேபியாவில் சர்வதேச 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் தகுதிச்சுற்றில் முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் சுதிர்த்தா முகர்ஜீ, நேற்று கடைசி போட்டியில் ஸ்பெயினின் சோபியா ஜங்கை சந்தித்தார். முதல் செட்டை 10-12 என இழந்த சுதிர்த்தா, அடுத்த செட்டை 11-4 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 11-3 என வசப்படுத்தினார். கடைசி இரு செட்டில் 8-11, 9-11 என ஏமாற்றினார். முடிவில் சுதிர்த்தா 2-3 என தோல்வியடைந்தார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் யாஷஸ்வினி, துருக்கியின் சிபல் அல்டின்கயா மோதினர். இதில் யாஷஸ்வினி 1-3 (11-1, 9-11, 6-11, 7-11) என தோற்றார்.ஆண்களுக்கான தகுதிச்சுற்று மூன்றாவது போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், சீன தைபே வீரர் பெங் இயை சந்தித்தார். இதில் ஹர்மீத் தேசாய் 0-3 (8-11, 8-11, 9-11) என தோல்வியடைந்தார். இந்தியாவின் சரத்கமல், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா இன்று பிரதான சுற்றில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ