உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / போபண்ணா ஜோடி தோல்வி

போபண்ணா ஜோடி தோல்வி

மான்ட்ரியல்: ஏ.டி.பி., டென்னிஸ் இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வியடைந்தது.கனடாவின் மான்ட்ரியலில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, மொனாக்கோவின் ஹியுகோ, போலந்தின் ஜைலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-4 என கைப்பற்றியது. அடுத்த செட்டில் சற்று ஏமாற்ற, 3-6 என இழந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதை போபண்ணா ஜோடி 7-10 என கோட்டை விட்டது.ஒரு மணி நேரம், 9 நிமிடம் நடந்த போட்டியில் போபண்ணா ஜோடி 6-4, 3-6, 7-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை