உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி

டென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி

மைசூரு: இந்தியாவின் மைசூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சக வீராங்கனை சோகா பாட்டீலை சந்தித்தார். ஒரு மணி நேரம், 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ராஷ்மிகா 7-5, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹுமைரா, 7-5, 6-4 என சக வீராங்கனை அமோதினியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகான்ஷா, சோகா ஜோடி, இந்தியாவின் மற்றொரு ஆர்ஜான், காஷ்வி ஜோடியை சந்தித்தது. இதில் ஆகான்ஷா, சோகா ஜோடி 6-0, 6-1 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை