மேலும் செய்திகள்
டென்னிஸ்: காலிறுதியில் சஹாஜா
19-Dec-2024
டென்னிஸ்: சஹாஜா அபாரம்
10-Dec-2024
இந்து என்று சொன்னால் மதவாதமா
19-Dec-2024 | 1
நவி மும்பை: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரியா பாட்யா, ஜீல் தேசாய் ஜோடி இரண்டாவது இடம் பிடித்தது. இந்தியாவில் (நவி மும்பை) பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரியா பாட்யா, ஜீல் தேசாய் ஜோடி, ஜப்பானின் சடோ, மோரிசகி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 6-4 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' இந்திய ஜோடி 7-10 என நழுவவிட்டது. ஒரு மணி நேரம், 43 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், இந்திய ஜோடி 6-4, 3-6, 7-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து, கோப்பை இழந்து, இரண்டாவது இடம் பிடித்தது.
19-Dec-2024
10-Dec-2024
19-Dec-2024 | 1