உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / சுமித் நாகல் நம்பர் 68 * டென்னிஸ் தரவரிசையில் அபாரம்

சுமித் நாகல் நம்பர் 68 * டென்னிஸ் தரவரிசையில் அபாரம்

புதுடில்லி: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல், 68 வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இந்தியாவின் சுமித் நாகல், 779 புள்ளிகள் பெற்று, 73 வது இடத்தில் இருந்து, 5 இடம் முன்னேறி, முதன் முறையாக 68 வது இடம் பிடித்தார். கடந்த ஆண்டு சாலஞ்சர் தொடரில் 4 கோப்பை வென்ற இவர், 2024லும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்கிறார். ஆஸ்திரேலிய ஓபனில் 31வது 'ரேங்க்' வீரர் பப்லிக்கை (கஜகஸ்தான்) வென்றார். கடந்த பிப்ரவரியில் சென்னை ஓபனில் கோப்பை வென்ற சுமித் நாகல், சமீபத்தில் ஜெர்மனி தொடரிலும் சாம்பியன் ஆனார். இதையடுத்து தரவரிசையில் தொடர்ச்சியான முன்னேற்றம் கிடைத்து வருகிறது. தவிர, பாரிஸ் ஒலிம்பிக்கில் தரவரிசை அடிப்படையில் பங்கேற்கும் வாய்ப்பும் பெற்றுள்ளார்.இந்திய டென்னிஸ் ஒற்றையரில் தற்போதுள்ள வீரர்களில் சுமித் நாகல், 'நம்பர்-1' ஆக உள்ளார். சமீபத்தில் 71வது இடம் பிடித்த இவர், சஷி மேனனை (1973ல் 71வது) பின்தள்ளினார். விஜய் அமிர்தராஜ் (1980ல் 18வது இடம்), ரமேஷ் கிருஷ்ணன் (1985ல் 23), சோம்தேவ் தேவ்வர்மனுக்கு (2011ல் 62) அடுத்து தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற வீரர் ஆனார் சுமித் நாகல். இரண்டாவது சுற்றில்...சுவீடனில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. முதல் சுற்றில் சுமித் நாகல், சுவீடனின் எலியாசை 6-4, 6-3 என வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் வென்றால் காலிறுதியில் ஸ்பெயினின் நடாலுடன் மோதுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை