| ADDED : ஜூலை 17, 2024 10:54 PM
புதுடில்லி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் பங்கேற்க தகுதி பெற்றார் சுமித் நாகல்.அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் வரும் ஆக. 26-செப். 8ல் நடக்கவுள்ளது. இதில் ஒற்றையர் போட்டியில் பங்கேற்க நேரடியாக தகுதி பெற்றார் இந்திய வீரர் சுமித் நாகல். சமீபத்தில் வெளியான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 68 வது இடம் பிடித்ததால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.இதையடுத்து ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், தற்போது யு.எஸ்., ஓபன் என ஒரு ஆண்டில் தொடர்ந்து நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் ஆகிறார் சுமித் நாகல். முன்னதாக 2019ல் குன்னேஸ்வரன் இதுபோல விளையாடினார்.தவிர சோம்தேவ் தேவ்வர்மனுக்கு அடுத்து, யு.எஸ்., ஓபனில் மூன்றாவது முறையாக பங்கேற்கும் இந்தியர் என பெருமை பெறவுள்ளார் சுமித் நாகல். இது இவரது 7வது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக உள்ளது.