உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்...

இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்...

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-2' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய மால்டோவாவின் ராடு ஆல்போட்டுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என எளிதாக வெற்றி பெற்றார். பெடரர் 'சமன்'இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், யு.எஸ்., ஓபனில் பெற்ற 89 வது வெற்றி (13 தோல்வி) ஆனது. தவிர இங்கு அதிக வெற்றி பெற்ற வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள பெடரரை (89 வெற்றி, 14 தோல்வி, சுவிட்சர்லாந்து) சமன் செய்தார். முதலிடத்தில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (98-17) உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அசரன்கா, செக் குடியரசின் கிரெஜ்ஜிகோவா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, ஸ்பெயினின் படோசா, அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் 16 வயது வீராங்கனை இவா ஜோவிச், 6-4, 6-3 என போலந்தின் லினெட்டியை வென்றார். 2000க்குப் பின் யு.எஸ்., ஓபனில் வெற்றி பெற்ற இளம் அமெரிக்க வீராங்கனை ஆனார். சுமித் நாகல் ஏமாற்றம்ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் (நம்பர்-73), நெதர்லாந்தின் டல்லானை (நம்பர்-40) சந்தித்தார். 2 மணி நேரம், 10 நிமிடம் நடந்த போட்டியில் முடிவில், சுமித் நாகல் 1-6, 6-3, 6-7 என போராடி தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை