மேலும் செய்திகள்
பாட்மின்டன்: அன்மோல் அசத்தல்
10-Oct-2025
டாம்பிகோ: மெக்சிகோவில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 347 வது இடத்திலுள்ள இந்தியாவின் சஹாஜா, முன்னாள் 'நம்பர்-3' வீராங்கனை, யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் கோப்பை (2017) வென்ற அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார்.முதல் செட்டை சஹாஜா, 6-2 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற குரோஷியாவின் மார்சின்கோவை சந்திக்க உள்ளார்.
10-Oct-2025