உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / விம்பிள்டன்: ஜோகோவிச் அபாரம்

விம்பிள்டன்: ஜோகோவிச் அபாரம்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், 'நம்பர்-2' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், பிரிட்டனின் பியர்ன்லேவை சந்தித்தார். முதல் இரு செட்டை ஜோகோவிச் 6-3, 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டை 5-7 என இழந்தார். நான்காவது செட்டில் அசத்திய இவர், 7-5 என வசப்படுத்தினார்.முடிவில் ஜோகோவிச் 6-3, 6-4, 5-7, 7-5 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, பிரான்சின் மான்பில்ஸ் மோதினர். இதில் வாவ்ரின்கா 6-7, 6-4, 6-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். பல்கேரியாவின் டிமிட்ரோவ், 5-7, 6-7, 6-4, 6-2, 6-4 என நீண்ட போராட்டத்துக்குப் பின் சீனாவின் ஷங்கை வீழ்த்தினார்.பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, செக் குடியரசின் பிரண்டாவை 6-4, 6-2 என நேர் செட்டில் வென்றார். கஜகஸ்தானின் புடின்செவா 6-0, 4-6, 6-2 என செக் குடியரசின் சினியகோவாவை வென்றார். ரஷ்யாவின் கசட்கினா, பிரிட்டனின் மியாஜகியை 6-0, 6-0 என சாய்த்தார். அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, 4-6, 7-6, 1-6 என்ற கணக்கில் சீனாவின் ஜி வாங்கிடம் போராடி தோல்வியடைந்தார்.போபண்ணா ஜோடி வெற்றிஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பிரான்சின் ஒலிவெட்டி ஜோடி, கஜஸ்தானின் பப்லிக், செவ்சென்கோ ஜோடியை 6-4, 6-4 என நேர் செட்டில் வீழ்த்தியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, பிரிட்டனின் ஜான்சன் ஜோடி, 4-6, 5-7 என எல் சால்வடாரின் மார்செலோ, குரோஷியாவின் பவிச் ஜோடியிடம் தோற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி