உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள்

பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள்

அரியலூர்: பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. அரியலூர் ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், தாசில்தார் முத்துவடிவேல் வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகா, கீழப்பழுவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தில், வரும் 13ம் தேதி காலை 11 மணிக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா நடக்கிறது. இவ்விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்., கவுன்சில் உறுப்பினர், பஞ்.,யூனியன் சேர்மன், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட அளவிலான பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். விழாவில் நிலப்பட்டா, மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அனைவரும் பங்கேற்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை