| ADDED : ஆக 13, 2024 07:11 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம், நரசிங்கம்பாளையத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப் பட்ட வழங்கக் கோரி,ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜெயங்கொண்டம் அடுத்த வங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பாளையம் மேற்கு தெருவில் வீடு கட்டி வசித்து வரும் 100}க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், தங்களுக்கு குடியிருப்பு நிலத்துக்கான பட்ட கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.போராட்டத்துக்கு, அக்கட்சியின் நரசிங்கம்பாளையம் கிளைச் செயலர் பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் வெங்கடாசலம் உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலர் இளங்கோவன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.போராட்டத்தில், கிளைத் தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் மற்றும் நரசிங்கம்பாளையம் பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நரசிங்கம்பாளையம் பழங்குடியின மக்களுக்கு குடியிருப்புக்கான இலவச பட்டா வழங்கக் கோரி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நேற்று உண்ணாவிரதம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.