மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் சாவு
20-Jan-2025
புதுச்சேரி : அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம், இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், 45; சென்னையில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு கஸ்துாரி பிரபா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.கடந்த 2 மாதங்களுக்கு முன் தீபாவளி பண்டிகைக்காக வீட்டிற்கு வந்த முத்துகுமார், மீண்டும் சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகே முத்துக்குமார் இறந்து கிடந்தார். தகவலறிந்த கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது மனைவி கஸ்துாரி பிரபா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Jan-2025