செஸ் போட்டி சிறுமிக்கு நிதியுதவி
அரியலுார்:மேற்காசிய நாடான குவைத்தில், இன்று முதல் மே 13ம் தேதி வரை நடைபெற உள்ள மாபெரும் சதுரங்க விளையாட்டில், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க சாம்பியன் சர்வாணிகா, 9, இந்தியா சார்பில் வயது வரம்பற்றோர் பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளார். இதையடுத்து, அரியலுார் கலெக்டர் ரத்தினசாமி, சர்வாணிகாவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, தன் விருப்ப நிதியிலிருந்து, 25,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கி, போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.