மேலும் செய்திகள்
கந்து வட்டி: ஆசிரியை தற்கொலை
12-Sep-2025
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
03-Sep-2025
அரியலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
31-Aug-2025
அரியலூர்: விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தே.மு.தி.க., அரங்கூர் கிளை சார்பில் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, அரங்கூர் தே.மு.தி.க., கிளை சார்பில், விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் அருகே லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் நேற்று நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு, கட்சியின் செயற்குழு உறுப்பினர் அரங்கூர் சிவக்குமார் தலைமை வகித்தார். அரங்கூர் கிளை செயலாளர் பழனியப்பன் வரவேற்றார். தே.மு.தி.க., மங்களூர் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் வெங்கடேசன், சோலைமுத்து முன்னிலை வகித்தனர். வள்ளலார் கல்வி நிலையத்தில் தங்கி கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் 400 பேருக்கு, இலவச நோட்டு, பேனா, பென்சில் மற்றும் இனிப்புகளை, தே.மு.தி.க., அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளர் கவியரசன், அரியலூர் ஒன்றிய செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், ஒன்றிய பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பழக்கடை பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். வள்ளலார் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
12-Sep-2025
03-Sep-2025
31-Aug-2025